12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

0
149
#image_title

12 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க!!

 

அடுத்த மாதம் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.

 

தமிழக பள்ளிக்கல்வி துறை தரப்பில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 324 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 8 லட்சத்து 17 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர்.

 

விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடந்தது.

 

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு சில நாட்களுக்கு முன் வெளியானது. தமிழ்நாட்டில் பள்ளி பொதுத்தேர்வு வரலாற்று முதல் முறையாக திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600-க்கு, 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.

 

மேலும் இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம் தற்போது கூடுதலாக 0.54 சதவீதம் அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் ஆண்களை விட பெண்கள் அதிகமாக தேர்ச்சியடைந்தனர்.

 

 

இந்த பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான தனித்தேர்வு அடுத்த மாதம் ஜூன் மாதத்தில் 19 ஆம் தேதியில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு இந்த மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk