ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம்!! அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு!!

0
121
#image_title

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் அருகே பிடிபட்ட 13 அடி ராஜா நாகம். அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவிப்பு.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கும்மரினவகம் அருகே வயல்வெளியில் நடமாடிய 13 ராஜ நாகம் பிடிபட்டது.

ராஜ நாகம் நடமாடுவதை பார்த்த கிராம பொது மக்கள் அந்தப் பகுதி வசிக்கும் பாம்பு பிடிக்கும் நபர் பாலாராஜூக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த பாலராஜு 13 ராஜ நாகத்தை பிடித்து இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.

விரைந்து வந்த வனத்துறையினர் ராஜநாகத்தை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.

சாதாரணமாக வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும் ராஜநாகம் வயல்வெளியில் காணப்பட்டதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியில் 12 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு ஒன்று பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து ராஜநாகம் காணப்படுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனதுறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

author avatar
Savitha