தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்!

0
75

தமிழகத்தில் பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி , பெரம்பலூர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களும், 18 ஐஏஎஸ் அதிகாரிகளும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில்,

  • சென்னை கலால் துறை துணை ஆணையர் சங்கீதா மாற்றப்பட்டு உயர் கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
  • வருவாய்த்துறை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் அருணா மாற்றப்பட்டு வேளாண்துறை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு வீட்டு வசதி வாரியச் செயலாளர் பி. கணேசன் மாற்றப்பட்டு நகரம் மற்றும் ஊரகத் திட்டமிடல் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மாற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பட்டு வளர்ப்புத்துறை இயக்குனர் ஸ்ரீ வெங்கட ப்ரியா மாற்றப்பட்டு பெரம்பலூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாற்றப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாற்றப்பட்டு சேலம் மாவட்ட பட்டு வளர்ப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் மாற்றப்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அரசு நிதித்துறை இணைச் செயலர் அரவிந்த் மாற்றப்பட்டு கன்னியாகுமரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மாற்றப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தருமபுரி ஆட்சியர் மலர்விழி மாற்றப்பட்டு கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு ஊரக மாற்றம் திட்டத் தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.பி. கார்த்திகா மாற்றப்பட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம், திட்ட இயக்குனர் அஜய் யாதவ் மாற்றப்பட்டு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணைச் செயலாளர் சிவஞானம் மாற்றப்பட்டு தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம், திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு நகர நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் தலைவர் /மேலாண் இயக்குனர் அபூர்வா வர்மா மாற்றப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் இணை மேலாண் இயக்குனர் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • செய்தித்துறை இயக்குனர் ஷங்கர் மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
  • திருவாரூர் மாவட்ட ஆட்சியர் டி.ஆனந்த மாற்றப்பட்டு தமிழ்நாடு வேளாண்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
author avatar
Parthipan K