இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!!

0
119

இந்தியாவில் 22 லட்சம் ஊழியர்கள் வேலை விட்டு வெளியேறுவார்கள்:! பகிர வைக்கும் காரணம்!!

இந்தியாவில் வருகின்ற 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 22 லட்சம் ஐடி ஊழியர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறுவார்கள் என்று நிறுவனம் ஒன்று தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.டீம்லீஸ் டிஜிட்டல் என்ற நிறுவனம் டேலண்ட் எக்ஸோடஸ் என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி 57 சதவீத ஐடி வல்லுநர்கள் வருங்காலத்தில் ஐடி துறைக்கு திரும்பவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் 2022-ம் ஆண்டில் 49 சதவீதத்துடன் ஒப்பிடும் பொழுது 2023 ஆம் நிதியாண்டி 55 சதவீதமாக ஒப்பந்த பணியாளர்களின் எண்ணிக்கை சதவீதம் வளர்ச்சி அடையும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் சம்பள உயர்வு செயல்திறனை உயர்த்தி வேலை திருப்தியை அதிகரித்தாலும் வருகிற 2025 ஆம் ஆண்டிற்குள் 25 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வு அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்கள் வெளியேறுவதற்கான காரணம்,2021 ஆம் ஆண்டில் ஐடி துறையின் வீழ்ச்சிக்கு புதிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அதிகரிப்பதே முக்கிய காரணம் என்று எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது.மேலும் ஐடி நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பீடை சந்தித்து வருவதால் ஐடி நிறுவனங்களின் சிறந்த ஊழியர்கள் தானாகவே முன்வந்து வேலையை விட்டு வெளியேறுவதாக அய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

author avatar
Pavithra