மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

0
56

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரையில் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்கள் தென்மாவட்டங்கள் ராணிப்பேட்டை, வேலூரில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிக பட்சமாக வால்பாறை மற்றும் சின்ன கல்லூரில் தலா 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இன்று முதல் இரண்டு தினங்களுக்கு கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் லட்சத்தீவு பகுதிகளிலும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்ற காரணத்தால், மீனவர்கள் இந்த நாட்களில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.