பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா?

0
102
The mother who brutally assaulted the child she gave birth to! Is this the reason when you look at the mood?
The mother who brutally assaulted the child she gave birth to! Is this the reason when you look at the mood?

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்! மனநிலையை பார்த்தால் இதுதான் காரணமா?

கடந்த சில தினங்களாக ஒரு தாய் 3 வயது குழந்தையை போட்டு தாறுமாறாக அடிப்பதை நாம் பார்த்திருப்போம். அந்த வீடியோவில் குழந்தையின் முதுகுப்பகுதியில் தடுப்பு தடுப்புகளாக அடித்து இருந்ததையும் அந்த பின் அந்த வீடியோவில் காட்டியிருந்தார். மேலும் காலில் அடிபட்டு இருந்த கண்ணி போய் இருந்த புண் காயத்தின் மீது மீண்டும் அழுத்தி அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுது துடித்தது. அப்படி இருந்த நிலையிலும் வாயின் மீது அழுகிறது என்று வாயின் மேலும் அடித்து, அடித்து ரத்தம் வடியும் வரை ரசித்த கொடுமையான தாயை நாம் அந்த வீடியோவில் பார்த்தோம்.

இந்நிலையில் அந்த வீடியோ வைரல் ஆனது. அதை பார்த்த பல தாய்மார்கள் பல விதங்களில் அந்த பெண்ணை தூற்றி வந்தார்கள். ஏனென்றால் பலபேருக்கு இன்று குழந்தை பிறப்பதே பெரிய விசயமாக இருப்பது குறிப்பிடத் தக்கது. அந்த வீடியோவை  பார்த்த குழந்தையின் தந்தை தந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பெண்ணை நேற்று கைது செய்தனர். நேற்று மாலை தொடர்ந்து கைது செய்ததை தொடர்ந்து அவரை மனநல ஆலோசகரிடம் காண்பிக்கவும் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மல்லபாடி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன். 37 வயதான இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம் பள்ளியை சேர்ந்த துளசி என்ற 22 வயது பெண்ணுக்கும், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல் என்ற 4 வயது மகனும், பிரதீப் என்ற 2 வயது மகனும் உள்ளனர். தற்போது கொரோனா காலத்தில் வருமானம் இல்லாமல், கருத்து வேறுபாடு காரணமாக, கணவருடன் கோபித்துக்கொண்டு துளசி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

இதற்கிடையே துளசி தனது இரண்டு வயது மகனான பிரதீப்பை கீழே படுக்க வைத்து கையால் குழந்தையின் வாயை தாக்கும் காட்சி மற்றும் குழந்தையின் கால்களை தாக்கும் கொடூரமான காட்சி ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. மேலும் ஆந்திராவுக்கு விரைந்து சென்ற போலீசார் துளசியை நேற்று மாலை கைது செய்தனர். இன்று காலை சென்னை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவரிடம் இரண்டு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். துளசி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது.

இதனை தொடர்ந்து அவருக்கு மன நல பரிசோதனை நடத்துவதற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இது குறித்து அந்த குழந்தையின் தாய் பற்றி தந்தை ஒரு அதிர்ச்சிகர தகவலை கூறினார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக கூறினார். அதன் காரணமாகவே குழந்தையை இப்படி அவர் சித்ரவதை செய்வதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனநல மருத்துவர் துளசியிடம் பேச்சுக் கொடுத்தார்.

அப்போது துளசி எல்லா கேள்விகளுக்கும் தெளிவாகவே பதிலளித்துள்ளார். கள்ள காதலையும் விட முடியாமல் கட்டிய கணவன் மீதுள்ள வெறுப்பின் காரணமாக இவ்வாறு செய்து விட்டதாக தெரிகிறது. குழந்தையை அடித்தது குறித்து வேதனை படுகிறீர்களா? என்று கேட்டதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளார். எல்லா கேள்விகளுக்கும் தெளிவாக பதில் அளிப்பதன் காரணமாக அவருக்கு மனநிலை பாதிக்கப் படவில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான வேலைகளை போலீசார் செய்து வருகின்றனர். துளசியின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.