4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

0
151
4 cinnamon sticks are enough.. Mosquitoes will die in droves!! Try it today!!
4 cinnamon sticks are enough.. Mosquitoes will die in droves!! Try it today!!

4 லவங்கம் போதும்.. கொசுக்கள் கொத்து கொத்தாக மடியும்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!

மழைக்காலம் ஆரமித்து விட்டாலே கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான்.மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.அதிலும் அனோபிலஸ்’ ,’ஏடிஸ் ஏஜிப்டி’ போன்ற கொசு வகைகள் மலேரியா,டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் தன்மை கொண்டவை.கொசுக்கள் உருவத்தில் சிறியவை என்றாலும் இதனால் ஏற்படும் பாதிப்பு மனித குலத்திற்கு எப்பொழுதும் ஆபத்து தான்.

மேலும் இதிலிருந்து தப்பிக்க என்னதான் நாம் கொசுவலை மற்றும் கொசுவர்த்தி சுருள்,குட் நைட்,ஆல் அவுட் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வந்தாலும் கொசுக்கள் மட்டும் ஒழிஞ்சபாடு இல்லை என்பது தான் நிதர்சனம்.கொசுக்களை விரட்ட என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் நபர்களுக்கு நமது கிச்சனில் அதற்கான தீர்வு இருக்கிறது என்பது தெரியவில்லை.சமயலுக்கு பயன்படுத்தி வரும் வாசனை நிறைந்த மூலிகை பொருளான இலவங்கத்தை தான் கொசுக்களை ஒழிக்க நாம் பயன்படுத்த வேண்டும்.

நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் ஆளை விடுடா சாமி என்று தெறித்து ஓட செய்வதற்கான எளிய ரெமிடி இதோ.

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம்

*கற்பூரம்

செய்முறை:-

ஒரு மண் விளக்கு எடுத்து அதில் சமையலுக்கு பயன்படும் இலவங்கம் 4 மற்றும் சாமி தரிசனத்திற்கு உபயோகிக்கும் கற்பூரம் 3 என்ற அளவில் சேர்த்து விளக்கை பற்ற வைக்கவேண்டும்.இதற்கு முன்னதாக வீட்டின் நுழைவு கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடி விடவேண்டும்.இலவங்கம் மற்றும் கற்பூரத்தில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு சுத்தமாக பிடிக்காது.இதனால் விளக்கில் இருந்து வரும் வாசனையை தாங்க முடியாமல் வீட்டில் பதுங்கி நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் மடிந்து போகும்.இந்த ரெமிடியை தினமும் செய்து வந்தோம் என்றால் நம் வீட்டை சுற்றி பதுங்கி இருக்கும் கொசுக்களுக்கு குட் பாய் சொல்லி விடலாம்.மேலும் புதினா,துளசி,பிரிஞ்சி உள்ளிட்ட வாசனை செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலமும் கொசுக்களை விரட்ட முடியும்.