உலகின் மிகவும் ஆரோக்கியமான இடம்!! 120 வயதை தாண்டி வாழும் பல பேர்

0
67

ஜப்பான் நாட்டில் ஒரு இடம் உள்ளது அங்கு மரணத்தையும் வென்ற மக்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். எந்த ஒரு உடல் பாதிப்பும் இல்லாமல் 120 வயதையும் தாண்டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

 

ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா என்ற இடம் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ஆச்சரியம் கொடுப்பதாகவும் இருக்கும். இது ஜப்பானில் தெற்குப்பகுதியில் மிகவும் ஆரோக்கியத்துடன் பச்சை பசேல் என்று இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் அளவிற்கு அழகாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜப்பானின் சொர்க்க வாசல் என்று இந்த ஒகினாவா என்ற இடம் அழைக்கப்படுகிறது.

 

அப்படி என்ன இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது என்று நினைப்பவர்கள் பலர். அது என்னவென்றால் இந்த இடத்தில் மக்கள் ஆரோக்கியமாக 100 வயதையும் தாண்டி மிகவும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்க முறைகள் ‌.

 

இந்தத் தீவில் கிட்டத்தட்ட 450 பேருக்கு மேல் 100 வயதைத் தாண்டி உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதனால் என்னவோ உலகின் ஆரோக்கியமான இடம் என்று ஒகினாவா அழைக்கப்படுகிறது.

 

இந்த மக்கள் 100 வயதையும் தாண்டி வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அவர்களின் உணவுப் பழக்கங்களை முதல் காரணியாக விளங்குகிறது என்று கூறுகிறார்கள். இவரது பழக்கவழக்கங்கள் மிகவும் புதுமையானவை. விருந்துகள் என்பது திருவிழா சமயத்தில் மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

திருவிழா போன்ற சமயங்களில் மட்டுமே இந்த மக்கள் மற்ற புலால் உணவுகளைத் உண்ணுவர் என்று சொல்லப்படுகிறது.

 

மற்ற நாட்களில் அவர்களது தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றை கொண்டு சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.

 

இங்கு வாழும் மக்கள் மிகவும் மன நிம்மதியுடனும் எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் வாழும் கலையை கற்றுக் உள்ளதால் , இவர்களுக்கு உடம்பில் புற்றுநோய் ரத்த அழுத்தம் மாரடைப்பு போன்ற எந்த வித பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

author avatar
Kowsalya