தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!!

0
103
50,000 e-service centers in Tamil Nadu!! ANNOUNCEMENT RELEASED!!
50,000 e-service centers in Tamil Nadu!! ANNOUNCEMENT RELEASED!!

தமிழகத்தில் 50,000 இ-சேவை மையங்கள்!! அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் ஜூலை மாத இறுதிக்குள் 50,000 இ-சேவை மையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கான பணி வேகமாக நடைபெற்று கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் தொழில் முனைவோர்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றது.  அரசு தரப்பில் இருந்து இதனுடைய எண்ணிகையை 50000 ஆக உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சேவை மையங்கள் தமிழகத்தில் மட்டும் பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றது.இதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் இதன் மூலம் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் இணைய மையங்கள் செயல்படுகிறது என்பதை இணையத்தின் மூலமாகவே தெறித்து கொள்ள முடியும்.இவற்றின் மூலம் 235 க்கு மேற்பட்ட அரசு இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

அரசின் அனைத்து திட்டங்களுக்கும் இந்த இணைய சேவை மையங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதனை தொடர்ந்து இந்த இணைய சேவை மையங்களின் மூலம் அரசு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகின்றது.

இவ்வாறு பயனுள்ள இந்த இ-சேவை மையங்களை அரசு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இப்பொழுது தமிழகம் முழுவதும் 24,500 இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றது.

மேலும் தமிழக அரசு  இந்த எண்ணிக்கை 50,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.  இதன் மூலம் வருமானச் சான்றுதல் ,ஜாதி சான்றுதல் மற்றும் இருப்பிட சான்றுதல் என்று அனைத்தையும்  235  மேற்பட்ட அரசு சேவைகளில் பெற இவற்றின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

author avatar
Parthipan K