தமிழகத்தில் நாளை நடைபெறும் 15வது மெகா தடுப்பூசி முகாம்! தயார் நிலையில் 75 லட்சம் தடுப்பூசிகள்!

0
85

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து அந்த காலகட்டத்தில் அதனை தைரியமாக எதிர்கொண்டது தமிழகம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது அதேபோல உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று காரணமாக, அச்சமடைந்து இருந்த காலகட்டத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தது இந்தியாதான். இந்தியா முன்னெடுத்த நடவடிக்கைகளை பல உலக நாடுகள் பாராட்டியும், அதே சமயம் இந்தியாவை பின்பற்றியும், இருந்தார்கள்.

இந்த நோய் தொற்று வேகமாக பரவத் தொடங்கிய காலகட்டத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்பது தெரியாமல் பல உலக நாடுகள் அச்சத்தில் இருந்தது, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தியாவில் இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயமும் கிடையாது தைரியமாக அந்த நோய் தொற்றை எதிர்த்து போராட்ட களத்தில் குதித்தார்கள். இதனை பார்த்த மற்ற நாடுகள் இந்தியா செய்வதை அப்படியே பின்பற்றியது.

அதன் விளைவு தற்சமயம் இந்த நோய்த்தொற்று ஏற்படாமல் உலகம் முழுவதும் மெல்ல, மெல்ல, குறைந்து வருகிறது அதே போல இந்தியாவிலும் வேகமாக நோய் தொற்று பரவல் குறைந்துவிட்டது.

இதற்குக் காரணம் தடுப்பூசி தான் அந்த தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, செயல்பட்டு வருவது தமிழகம் தான்.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த சூழ்நிலையில் தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றது, இதன் மூலமாக நாளொன்றுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தடுப்பூசி செய்துகொள்கிறார்கள்.

அதோடு 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் வரையில் 14 தடுப்பூசி முகாம்கள் தமிழ் நாட்டில் நடைபெற்று உள்ளது. அதன் மூலமாக 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் 15-ஆவது தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளைய தினம் நடைபெற உள்ளது.

காலை 9 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமை காலக்கெடு முடிவடைந்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்த விதத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் ஒரு கோடி பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 93 லட்சம் பேர் இரண்டாவது தவணைத் தடுப்பூசியும், செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள். தற்சமயம் 75 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

சென்னையில் மட்டும் 1500 பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கிறது, சென்னையில் இதுவரையில் 8 லட்சத்து 26 ஆயிரத்து 473 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அந்த விதத்தில் 87% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 63 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆகவே தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் இந்த தடுப்பூசி முகாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்.