நாள்பட்ட நெஞ்சு சளி 2 நிமிடத்தில் கரைந்து வெளியேறி விடும்!! இப்போவே ட்ரை பண்ணி பாருங்க!!
இருமல்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் நம்மை எளிதில் தாக்கி விடும் பாதிப்புகள் ஆகும்.இதில் நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் நமக்கு மிகவும் சிரமத்தை கொடுத்து விடும்.இந்த நெஞ்சு சளி பாதிப்பை மாத்திரைகள் மூலம் குணப்படுத்துவதை காட்டிலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பது உடனடி பலனைக் கொடுக்கும்.
சளியை கரைத்து வெளியேற்றுவதில் கற்பூரவல்லி,மிளகு போன்ற பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.இதுபோன்று 10 பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து பருகுவது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்:-
*வெற்றிலை – 2
*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி
*கற்பூரவல்லி இலை – 2
*கருப்பு மிளகு – 8
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*கிராம்பு – 2
*பூண்டு – 2 பற்கள்
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*சுக்கு -1 துண்டு
*தூயத் தேன் – சிறிதளவு
செய்முறை:-
1.அதிக மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை மற்றும் கற்பூரவல்லி இலைகள் 2 எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி கொள்ளவும்.
2.ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வெற்றிலை,கற்பூரவல்லி,கருப்பு மிளகு,பூண்டு,கிராம்பு,கொத்தமல்லி விதை,சுக்கு,சீரகம் உள்ளிட்டவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும்.
3.பின்னர் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்து மிக்ஸி ஜாரில் ஊற்றி பின்னர் நன்கு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.
4.அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த விழுதுகள் சேர்த்து அதனுடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
5.கொதிக்கும் தருவாயில் அதில் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும்.
6.பின்னர் நன்கு கொதித்து வந்தவுடன் அடுப்பை அணைத்து ஒரு தட்டு கொண்டு மூடவும்.
7.பின்னர் 5 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளர் எடுத்து அதனை வடிகட்டி கொள்ளவும்.
8.அடுத்து 1/2 தேக்கரண்டி தூய தேன் கலந்து இரவில் பருகவும்.
குறிப்பு:-
*1 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கஷாயத்தை குடுக்க கூடாது.
*பெரியவர்கள் 3/4 டம்ளர் என்ற விகிதத்தில் இந்த கஷாயத்தை பருகலாம்.
*இந்த கஷாயத்தை இரவில் உணவு எடுத்துக்கொண்ட பிறகு பருக வேண்டும்.
*இந்த கஷாயம் செய்ய தேவையான பொருட்களில் துளசியை சேர்த்துகொள்ளலாம்.
*இந்த கஷாயம் செய்ய எடுத்து கொண்ட பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டவை.இவை நம் நெஞ்சில் தேங்கி இருந்த கட்டி சளிகளை கரைத்து மலம் வழியாக வெளியேற்றி விடும்.