இரயிலை தள்ளிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள்! வீடியோ வைரலானதால் தெற்கு ரயில்வே விளக்கம்!!

0
37

இரயிலை தள்ளிய பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள்! வீடியோ வைரலானதால் தெற்கு ரயில்வே விளக்கம்!!

 

இன்று ஒரு இரயிலை இராணுவ வீரர்கள் தள்ளுவது போன்று வீடியோ ஒன்று வெளியாகி வைரலான நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

இன்று காலை பொதுமக்களும் அதாவது ரயிலில் பயணித்த பயணிகளும், ரயிலில் வேலை சொய்யும் ஊழியர்களும், இராணுவ வீரர்களும் இரயிலை தள்ளுவது போல வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி இணையம்   முழுவதும் சமூக வலைதளங்கள் முழுவதும் வைரலானது.

 

மக்களும் இராணுவ வீரர்களும் தள்ளிய இந்த ரயில் பற்றிய எந்தவொரு விவரமும் தெரியவில்லை. இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. பழுதாகி நிற்கும் இரயிலை மக்களும் இராணுவ வீரர்களும் தள்ளுவதாக பலரும் நினைத்துக் கொண்டனர். இதற்கு மத்தியில் இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக தெற்கு இரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

 

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் தெற்கு இரயில்வே “கடந்த ஜூலை 7ம் தேதி மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து கிளம்பிய ஃபலக்னுமா விரைவு இரயில் தெலுங்கானா மாநிலம் செகந்த்ராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது ஃபலக்னுமா விரைவு இரயில் பொம்மைப்பள்ளி, பகிடப்பள்ளி பகுதிகளுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று தீ பிடித்து. எரிந்தது.

 

இந்த தீ விபத்தில் எஸ் 2 பெட்டி முதல் எஸ் 6 பெட்டி வரை தீ பிடத்தது.  இதற்கு மத்தியில் இரயிலின் மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் இருக்க தீ பிடித்த பெட்டிகளை கழற்றி விட்டனர்.

 

கழற்றி விடப்பட்ட பெட்டிகளை இழுத்து செல்ல இஞ்சின் வருவதற்கு தாமதமினது. இதனால் தீ வேகமாக பரவ அதிக வாய்ப்பு இருந்ததால் அங்குள்ள பாதுகாப்பு படைவீரர்கள், இரயில் ஊழியர்கள், பொது மக்கள் ஒன்று கூடி தீ பிடித்த அந்த பெட்டிகளை தள்ளினர்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.