தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

0
174
#image_title

தினம் ஓர் பேரிச்சம்பழம்! உங்கள் உடலில் ஏற்படும் நன்மைகள் இதோ!

பேரிச்சம்பழம் என்பது ஒரு அதிசய பழம் ஆகும். ஒருவருக்கு ஒரு நாளில் அதிக ஊட்டச்சத்து கிடைக்க வேண்டுமென்றால் அவர் பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். மருத்துவ குணம் கொண்ட பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ,சுண்ணாம்பு சத்து ,நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், புரோட்டின், வைட்டமின் பி6, போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

பேரிச்சம் பழத்தை ஒருவர் தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் அவரது ஆரோக்கியம் மேம்பட்டு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்ட பேரிச்சம்பழம் நமது குடல் ஆரோக்கியத்தை காக்கின்றது. மலச்சிக்கல் கொண்டவர்கள் தினமும் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும். உடல் வளர்ச்சிக்கான மிகச் சிறந்த பழம் பேரிச்சம் பழம் ஆகும்.

100 கிராம் பேரிச்சம் பழத்தில் சுமார் 3 கிராம் புரோட்டின் உள்ளதால் அது உடல் வளர்ச்சிக்கு அற்புதமாக உதவுகின்றன. தினமும் 2 முதல் 3 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் அளவை அதிகரித்து ரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் 4 பேரிச்சம் பழத்தை பாலில் ஊற வைத்து காலை மாலை என இரு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் எடை கூடும்.

பேரிச்சம் பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கண் பார்வையை தெளிவாகவும் கண் சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தில் மிகக் குறைந்த அளவில்தான் கொழுப்புகள் உள்ளது. தினமும் ஒருவர் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சேரவிடாமல் பாதுகாக்கின்றன.

பேரிச்சம்பழத்தில் இவ்வாறு ஏராளமான சத்துக்கள் இருக்கின்றது அதனால் தினமும் ஒரு பேரிச்சம்பழம் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாக உள்ளது.மேலும் கர்ப்பிணி பெண்கள் தினமும் இரண்டு முதல் மூன்று நான்கு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வர குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது.

author avatar
Parthipan K