இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

0
196
#image_title

இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா? இந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் போதும்!

நம் உடம்பில் புதிய ரத்த செல்களை உற்பத்தி செய்வதற்கும் நாம் சுவாசிக்கும் காற்றை உடம்பு முழுவதும் எடுத்துச் செல்லவும் மிகவும் ஒரு அவசியமான சத்து இந்த இரும்பு சத்து.

மேலும் இந்த இரும்புச்சத்து ரத்தத்தில் குறைந்த அளவு இருப்பதை தான் நாம் இரும்புச் சத்து குறைபாடு என்று சொல்கிறோம்.

நாம் தினசரி உண்ணும் உணவில் இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் ,வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், குடல் புண் தொல்லை, இருப்பவர்களுக்கும் இந்த இரும்பு சத்து குறைபாடு இருக்கக்கூடும்.

பொதுவாக பச்சை காய்கறிகளில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் அனைத்து வகையான கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கின்றது. முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்பு சத்து இருக்கிறது.

100 கிராம் முருங்கைக் கீரையில் 2.32 கிராம் அளவு இரும்பு சத்து உள்ளது. மேலும் பீன்ஸ் வகைகள் அதாவது கருப்பு உளுந்து, கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் ,பச்சை பட்டாணி போன்றவைகளில் அதிக அளவு இரும்பு சத்து இருக்கின்றன.

வாழைப்பூ இதில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட் இதில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது. இரும்புச்சத்து மட்டுமில்லாமல் விட்டமின்கள், போலிக் ஆசிட் போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. ஹீமோகுளோபின் அளவையும் வேகமாக அதிகரிக்கின்றன.

author avatar
Parthipan K