மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று!

0
251

மார்னிங் டிபன்னிர்க்கு சூப்பரான சைடிஸ்! குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒன்று!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் ஓடிக்கொண்டே உள்ளனர் அவரவர்களின் வேலை காரணமாகவும் உணவு அருந்துவதற்கான கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் காலை நேரத்தில் சுலபமாக உணவுக்கான சைடிசை செய்து கொள்ளலாம் இந்த வகையில் உருளைக்கிழங்கு வருவல் சுவையாகவும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் வகை பிடிக்கும் வகையிலும் மொறுமொறுப்பாகவும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

முதலில் உருளைக்கிழங்கு ஒன்று, வெங்காயம் இரண்டு ,தக்காளி ஒன்று ,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் ,மல்லித்தூள் கால் ஸ்பூன் ,மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப, பூண்டு நான்கு பல், மிளகு 5 எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு. இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உருளைக்கிழங்கு வட்ட வடிவத்தில் இருக்குமாறும் மெலிசாக இல்லாமல் கனமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு பூண்டு மற்றும் மிளகாய் பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு கடாய் சூடான பிறகு ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். மேலும் தக்காளி சுருங்கிய நிலையில் வரும்வரை வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து உருளைக்கிழங்கு பாதி அளவு வேகும் வரை மிதமான சூட்டில் வதக்க வேண்டும். பின்பு சிறிதளவு எண்ணெய் ஊற்றி மஞ்சள் சிறிதளவு மிளகாய் தூள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும். மேலும் அதில் இடித்து வைத்த பூண்டு மற்றும் மிளகயைசேர்த்து உருளைக்கிழங்கு உடையாத வகையில் வதக்க வேண்டும். உருளைக்கிழங்கு மசாலா சேர்த்து சிவந்த நிறம் மற்றும் ஒரு மொறுமொறுப்பு வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். சுவையான மற்றும் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வருவல் தயாராகிவிடும்.

Previous articleபணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!
Next articleஉங்களுக்கு கவலை அதிகமாக இருக்க? ஆரோக்கியம் இல்லையா?  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here