ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு

0
146
#image_title
ஓபிஎஸ் மாநாட்டில் கத்தியுடன் புகுந்த நபர்! கடும் பரபரப்பு.
இரட்டைத் தலைமை சிக்கல் அதிமுகவில் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் ஜூலை மாதம் இபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனி நீதிபதி அமர்வு ஓபிஎஸ்-யின் எல்லா மனுக்களையும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இதற்கு எதிராக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது விசாரணை நிலையில் இருக்கிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளாரக ஏற்றுக்கொள்ள கூடாது என்று ஓபிஎஸ் மனு அளித்தார். ஆனால் இதிலும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது‌, இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொது செயலாளராக அங்கிகரித்து இரட்டை இலை சின்னத்தையும் அவருக்கு வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் திருச்சியில் ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடைபெற்றது. இதில் அதிகமானோர் பங்கெடுத்தனர். இந்த கூட்டத்தில் கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றி கொண்டிருந்தார். போலிசார் அவரை மேடைக்கு பின்புறத்தில் அழைத்துச் சென்று விசாரித்த போது தனது சொந்த பாதுகாப்பிற்காக கத்தியை எடுத்து வந்ததாகவும், மற்ற படி வேறொன்றும் இல்லை எனவும், தான் ஓபிஎஸ்யின் தீவிர விசுவாசி என கூறினார். இந்நிலையில் தொண்டர்கள் அங்கே குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.