ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!!

0
32
Aadhaar and pan card not linked?? 15 Problems You Shouldn't Do!!
Aadhaar and pan card not linked?? 15 Problems You Shouldn't Do!!

ஆதார் மற்றும் பான் கார்டை  இணைக்க வில்லையா?? நீங்கள் மேற்கொள்ள வேண்டிய 15 சிக்கல்கள்!!

ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.அதற்கான கால அவகாசமும் ஜூன் 30 ம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லை. இதனால் இணைக்காதவர்களின் பான்கார்டு செல்லாது என்று  மத்திய அரசு அறிவித்த நிலையில் காலகெடு முடிந்த பின்பு ஆதார் மற்றும் பான் கார்டை இணைப்பவர்கள் அபராத தொகை ரூ. 1000  செலுத்தி இணைத்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இதில் மத்திய அரசு  சிலருக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது அதில் இந்திய குடிமகன் அல்லாதோர் ,80 வயதுக்கு மேற்பட்டோர் ,வருமான வரி கீழ் வராதவர்கள் ,ஆசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்த்தவர்கள்.

இவர்களை தவிர மற்றவர்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்க வில்லை என்றால் 15 வகையான சிக்கல்களை மேற்கொள்ள வேண்டும்.

  • ஆதார் மற்றும் பான் கார்டை இணைகாத நபர்கள் புதிதாக வங்கி கணக்கு தொடங்க முடியாது.
  • கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றை விண்ணப்பிக்கும் தகுதி அற்றவர்கள்.
  • புதிதாக டீமேட் கணக்கு துவங்க முடியாது.
  • உங்களால் எந்த வித பில் தொகைக்கும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் செலுத்த முடியாது.
  • வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய முடியாது.
  • எந்த வித வங்கி கணக்குகளிலும் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் முதலீடு செய்ய முடியாது.
  • நிறுவன பங்குகள் எதாவது ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் அவற்றை வாங்க முடியாது.
  • ரிசர்வ் வங்கியின் பத்திரம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் வாங்க முடியாது.
  • வங்கி கணக்குகளில் உங்களால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் செலுத்த முடியாது.
  • ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் காசோலைகளை வங்கியில் உங்களால் செலுத்த முடியாது.
  • ரூ.50 ஆயிரத்திற்கு மேல் காப்பீட்டு பிரிமீயம் செலுத்த முடியாது.
  • பங்குகளின் பரிவர்த்தனை ரூ.1 லட்சத்திற்கும் மேல் இருந்தால் வாங்க முடியாது.
  • செயலிழந்த பான் எண்ணுக்கு பதிலாக திரும்ப கோர முடியாது.
  • வங்கி கணக்கில் செயலிழந்த பான் கார்டு இணைக்கப்படிருந்தால் அவர்களுக்கு வட்டி அளிக்கப்படாது.
  • பான் எண் குறிப்பிடாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அவர்களுக்கு அதிக பட்சமாக டி.டி.எஸ் மற்றும் டி.சி.எஸ் பிடிக்கப்படும்.
author avatar
Parthipan K