தோசை மாவு இல்லையா கவலை வேண்டாம்! இதை ட்ரை செய்து பாருங்கள்!

0
105

தோசை மாவு இல்லையா கவலை வேண்டாம்! இதை ட்ரை செய்து பாருங்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் காலை நேரத்தில் டிபன் மதியம் சாதம் மீண்டும் இரவு டிபன் என்ற வழக்கத்தை கொண்டுள்ளனர் அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணவு முறை பிடிக்கும். ஒருவருக்கு தோசை மட்டுமே பிடிக்கும் மற்றவருக்கு இட்லி பொங்கல் பூரி இது போன்ற உணவுகளை விரும்புவார்கள். அந்த வகையில் தோசையை விரும்புவர்களுக்கு ஏதேனும் ஒரு சமயத்தில்

பிரிட்ஜில் தோசை மாவு இல்லை என்ற கவலை இனி தேவையில்லை. தோசை மாவு இல்லை என்றாலும் கோதுமை மாவை வைத்து தோசை  செய்யலாம் . என்ன சமைப்பது என்றே குழப்பமாக இருக்கக்கூடிய நேரத்தில் உடனடியாக இப்படி ஒரு தோசையை தயார் செய்து கொடுத்தால் வீட்டில் இருப்பவர்கள் நிச்சயமாக உங்களை பாராட்ட செய்வார்கள். இந்த தோசை மாவு தயார் செய்ய வெறும் பத்து நிமிடங்கள் எடுத்தாலே அது அதிகம்.

இன்ஸ்டன்ட் கோதுமை மாவு பொறி தோசை:இந்த தோசை செய்ய பொறி நமக்கு தேவைப்படும். பொறியை வாங்கி வீட்டில் ஒரு ஜாடியில் போட்டு ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை: முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அதில் பொறி – 2 கப், கோதுமை மாவு – 1 கப், தயிர் – 1/2 கப், உப்பு தேவையான அளவு, வெல்லம் – 1 ஸ்பூன், சிறிதளவு தண்ணீர் விட்டு முதலில் இந்த பொருட்களை எல்லாம் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

மீண்டும் தண்ணீரை ஊற்றி, இந்த மாவை நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவு அதிக அளவு திக்காகவும் இருக்கக் கூடாது. அதிக அளவு தண்ணியாகவும் இருக்கக் கூடாது.

அரிசி மாவு தோசை ஊத்தி அடுப்பை மிதமான தீயில் வைத்து மொறு மொறுவென சிவக்க வைத்து எடுத்தால் சூப்பரான தோசை தயார். இந்த தோசைக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தி சுட்டால் சுவையாக இருக்கும் மேலும் தேங்காய் சட்னி கார சட்னி எதை வேண்டுமென்றாலும் சைடிஸ் ஆக வைத்து கொள்ளலாம்.

 

author avatar
Parthipan K