சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

0
37
#image_title

சென்னையில் இயங்கும் புறநகர் மின்சார இரயால்களில் ஏசி பெட்டிகள்!!! விரைவில் அறிமுகமாகவுள்ளதாக இரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் தற்பொழுது இயங்கி வரும் புறநகர் மின்சார இரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் புறநகர் பகுதிகளை இணைப்பதில் புறநகர் மின்சார இரயில் சேவை பெரும் பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், வேலைக்கு செல்பவர்கள் என்று லட்சக்கணக்கான மக்கள் சென்னை புறநகர் மின்சார வாரியம் இரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட வழித்தடங்களில் நாளொன்றுக்கு சுமார் 700 மின்சார இரயில்கள் இயங்கி வருகின்றது. இந்த வழித்தடங்களில் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உள்ள பறக்கும் இரயில் பாதை வழித்தடத்தை முழுவதுமாக மாநில அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெற்கு இரயில்வே மேலாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழித்தடத்தை தமிழக அரசு மேட்டரை வழித்தடத்தின் தரத்திற்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கூறிய படி சென்னை புறநகர் மின்சார இரயில்களில் இரண்டு அல்லது மூன்று ஏசி பெட்டிகள் இணைப்பதற்கு தெற்கு ரயில்வே திட்டமிட்டு இருக்கின்றது.

இதையடுத்து இன்னும் ஆறே மாதங்களில் புறநகர் மின்சார இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது. தற்பொழுது மெட்ரோ இரயில் சேவை இல்லாத பல இடங்களுக்கு மின்சார இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் உதவியாக இருக்கும். இதன் மூலமாக பொது போக்குவரத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்பு இருக்கின்றது.