இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

0
123
Action against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!
#iAction against Hindu religious charity department official!! Chidambaram Dikshitar complaint!!mage_title

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது நடவடிக்கை!! சிதம்பரம் தீட்சிதர் புகார்!!

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மீது சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் சிதம்பரம்  நகர போலீசாரிடம் புகார் அளித்தனர்.

சிதம்பரம் நடராஜன் கோவிலில் உள்ள கனக சபையின்  மீது ஏறி சுவாமியை தரிசனம் செய்வதற்கு 4 நாட்கள் அனுமதி இல்லை என்று கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை அகற்ற கோரியதற்கு மறுப்பு தெரிவித்தாக சிதம்பர தில்லை காளியம்மன்  கோவில் அலுவலர் சரண்யா தன்னை மிரட்டுவதாக தீட்சிதர்கள் மீது புகார் கொடுத்தார்.

சிதம்பரம் சூப்பிரண்டு ரகுபதியிடம் அவர் கூறியது சமய அறநிலைத்துறை உத்தரவின் படி சிறப்பு பணிக்காக 24 ம் தேதி சென்றேன். அங்கு கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி இல்லை என்று பாதகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதை அகற்ற கோரிய போது தீட்சிதர்கள் மறுத்து விட்டனர் பின்னர் போலீசார் உதவியுடன் அதனை அகற்ற முயன்ற போது எனது பணியை செய்ய விடாமல் தீட்சிதரின் செயலாளர் மிரட்டுவது போன்று பேசியதாக அவர் கூறினார்.

அதனால் பொதுமக்களுக்கு இடையயூறாக உள்ள அந்த பதாகைகளை அகற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதேபோல் சிதம்பரம் நடராஜன் கோவில் தீட்சிதர்கள் சிதம்பர தில்லை காளியம்மன் கோவில் அலுவலர் சரண்யா மீது சிதம்பரம்  நகர இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தனர்.

சிதம்பர தில்லை காளியம்மன் கோவில் அலுவலர் சரண்யா பூஜை நடைபெறுவதற்கு இடையூறாக செயல்படும் வகையில் பதாகையில் இருந்த வாசகத்தை அளித்ததற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீட்சிதர்கள் புகார் தெரிவித்தனர்.

author avatar
Parthipan K