ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!!

0
56
ADMK: AIADMK ex-minister changed Leo success meet route!! It's OK if Vijay comes!!
ADMK: AIADMK ex-minister changed Leo success meet route!! It's OK if Vijay comes!!

ADMK: லியோ சக்சஸ் மீட்.. ரூட்டை மாற்றிய அதிமுக மாஜி அமைச்சர்!! விஜய் வந்தால் OK தான்!!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படமானது  கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான நாளிலிருந்து பாக்ஸ் ஆபிஸை நிரப்பிய நிலையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்திற்கான வெற்றி விழா நடைபெற்றது. இதில் அப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த சக்சஸ் மீட்டில் விஜய் பேசியது தான் தற்பொழுது சோசியல் மீடியா எங்கிலும் வைரலாகி வருகிறது.அதுமட்டுமின்றி அவ்வப்போது அரசியலில் நுழையப்போகுவதற்கான அறிகுறியாக அவருடைய பேச்சுக்களும் செயலும் உள்ளது.அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு தொகுதி வாரியாக பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பிடித்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இவர் அரசியலில் வருவதை அடுத்து பலரும் இவருடன் கைக்கோர்க்க வரவேற்பு  அளித்து வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு சக்சஸ் மீட்டில் நேற்று இவர் பேசியது அடுத்த கட்ட சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கான அறிகுறியாக இருந்தது. இதில் அவர் குறிப்பாக புரட்சித் தலைவர் என்றால் ஒருத்தர் தான், கேப்டன் என்றால் ஒருத்தர் தான், தலை என்றால் ஒருத்தர் தான், உலக நாயகன் என்றால் ஒருத்தர் தான், ஆனால் தளபதி என்றால் மக்களின் கட்டளைகளை கேட்டு அதன் கீழ் செயல்படுபவன் என்று கூறியது தற்பொழுது வைரலாகி வருகிறது.

மக்களின் கோரிக்கைகளை கேட்டு செயல்படுபவன் தான் தளபதி அப்படிதான் நான் என்று கூறியுள்ளார். அதேபோல அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர், வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நிற்பது குறித்து கேள்வி கேட்டதற்கு “கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் அளித்துள்ளார். இவ்வாறு இவர் கூறியதை அடுத்து அதிமுக முன்னாள் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரிடம் தனியார் பத்திரிகை ஊடகம் பல கேள்விகளை கேட்டுள்ளது.

அதில் அவர் கூறியதாவது, இது ஒரு ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி என்பதை தொடங்கலாம். ஆனால் அது ஒரு சகாப்தமாக இருக்க வேண்டும். புரட்சித்தலைவர் அவர்கள் திமுக என்னும் தீய சக்தியை அளிப்பதற்காகவே கட்சியை தொடங்கி, கிராமங்களில் உள்ள கடை கோடி மக்கள் வரை அனைவருக்கும் பல நன்மைகளை அளித்துள்ளார். அதனால் தான் தற்பொழுது வரை இதய தெய்வமாக அவர் உள்ளார்.

அந்த வகையில் புரட்சித்தலைவர் ஓர் சகாப்தம். அவர் வழியில் ஜெயலலிதா அம்மா அவர்களும் வந்தனர். அதனையொட்டி எடப்பாடி அவர்களும் அந்த பாதையில் வருகின்றார்.எங்களுக்கு விஜய் அவர்கள், இவ்வாறு அரசியல் கட்சியில் வருவது குறித்து எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்ளை.அதேபோல தமிழகத்தில் எந்த ஒரு கட்சியிலும் வெற்றிடம் என்பதே இல்லை. தற்பொழுது ஒரு கட்சி தொடங்குகிறது என்றால் அது மக்களின் செல்வாக்கை எப்படி பெறுகிறது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அந்த வகைகள் விஜய் அவர்கள் கட்சி தொடங்கினால் அதிமுக வின் ஓட்டானது எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார். இதுவே பல அதிமுக மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விஜய் அவர்கள் கட்சி தொடங்குகிறார் என்றால் யாரும் புரட்சித்தலைவர் ஆகிட முடியாது என்று கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ஜெயக்குமாரின் இந்த சாதுவான பதிலானது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.