ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்…

0
86

ஆஹா!!!!..நல்ல வாசனையுடன் சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி!.. பார்த்தவுடன் ருசிக்க தூண்டும்…

பீட்ரூட் பிரியாணி செய்வதற்கு முக்கிய தேவையான பொருள்கள்..   சுத்தம் செய்த பீட்ரூட் – 200 கிராம், பாசுமதி அரிசி – 200 கிராம், வெங்காயம் – 50 கிராம், பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி, கரம் மசாலாத் தூள் – ஒரு தேக்கரண்டி, உப்பு – ஒரு தேக்கரண்டி, நெய் – 2 மேசைக்கரண்டி, கொத்தமல்லி, புதினா இலைகள் – ஒரு கைப்பிடி(ஒவ்வொன்றிலும் 15 இலைகள்), பட்டை – 2 துண்டுகள், கிராம்பு, ஏலக்காய் – தலா 4

வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம், அரிசியை தண்ணீரில் போட்டு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். வெங்காத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பீட்ரூட்டை துருவலாக துருவிக் கொள்ளவும், அல்லது மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.நாண்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்கவும்.நன்கு வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் துருவிய பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்.பின்னர் கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு வதக்கி விடவும்.அதில் ஊற்றிய அரிசி, உப்பு, 450 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மிதமான தீயில் வைத்து மூடி வேக விடவும்.இடையிடையே மூடியை திறந்து கிளறி விடவும். பிரியாணிப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.நல்ல வாசனையுடன், சுவைமிக்க பீட்ரூட் பிரியாணி ரெடி.

 

 

 

author avatar
Parthipan K