அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு!

0
72

அதிமுக ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி இந்த சூழ்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை செய்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக 69 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. தங்கமணி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை நடந்து வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 14 இடங்களிலும் நாமக்கல் உட்பட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய ஒட்டுமொத்தமாக 69 பகுதிகளில் இன்று சோதனை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், மனைவி சாந்தி, உள்ளிட்டோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பிட்க்காயினில் தங்கமணி அவருடைய மகன் பெரிய அளவில் முதலீடு செய்து இருப்பதாகவும், சட்டவிரோதமாக சேர்த்த பணத்தில் பெரும் அளவை கிரிப்டோகரன்சி இல் முதலீடு செய்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.

இதற்கு முன்னரே 4 அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி இருக்கின்ற சூழ்நிலையில், இந்த சோதனை பட்டியலில் தற்சமயம் தங்கமணியும் இணைந்திருக்கிறார்.