முன்னாள் அமைச்சரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை! ரகளையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள்!

0
81

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தற்போது வரையில் கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, சேலம், சென்னை, என ஒட்டு மொத்தமாக 69 பகுதிகளில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகாவிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். சென்னையில் மட்டும் 14 பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.

அதேபோல நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் இருக்கின்ற தங்கமணி அவர்களின் வீட்டில் காலை 6 .30 மணி முதல் 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். அங்கே இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுக மற்றும் காவல்துறையை கண்டித்து கோஷம் எழுப்பி வருகிறார்கள்.. தங்கமணிக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர் என்று சொல்லக்கூடிய நாமக்கல்லில் இருக்கும் சத்தியமூர்த்தி இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஈரோட்டில் பாரி வீதி ,பண்ணை நகர், பண்ணை வீதி, கணபதி நகர், முனியப்பன் கோவில், உள்ளிட்ட வீதிகளில் ஐந்து பகுதிகளில் 30க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். கரூர் அருகே வேலாயுதம்பாளையம் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறது.

அதேபோல சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் இருக்கின்ற தங்கமணி, மகன் தரணிதரன், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தங்கமணியின் ஆதரவாளரான அதிமுகவின் முன்னாள் நகர்மன்றத் தலைவர் வெள்ளையங்கிரி, முன்னாள் ஒன்றிய குழு தலைவரும் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான செந்தில், குமாரபாளையம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் ஈவிகேஎஸ் என்ற சுப்பிரமணியம் முன்னாள் அமைச்சரின் உறவினர் சிவா உள்ளிட்டோர் அது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மற்றொரு ஆதரவாளரான பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி மற்றும் அவருடைய கணவரும் முன்னாள் பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மன் செந்தில் அவர்களின் பண்ணை வீட்டிலும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் சோதனை நடை பெறும் தங்கமணி வீட்டின் முன்பு குவிந்த அதிமுகவின் தொண்டர்கள் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த தடுப்பு கழிவுகளை அகற்ற வேண்டும் என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.