2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!!

0
28
#image_title

2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய விமான சேவை!!! சேலம் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!!!

சேலம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் சேலம் மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

சேலம் மாவட்டத்தின் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரத்தில் விமான நிலையம் இருக்கின்றது. இதையடுத்து இந்த விமான நிலையத்தில் இருந்து சேலம் முதல் சென்னை வரையில் ட்ரூஜெட் விமான சேவை நிறுவனம் மூலமாக விமான சேவை இயங்கி வந்தது.

இதையடுத்து ட்ரூஜெட் நிறுவனத்தின் விமான சேவை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் தொடங்கிய வேண்டும் என்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்.

இதையடுத்து விமான சேவை நிறுத்தப்பட்ட சேலம் மாவட்டத்தில் மீண்டும் விமான சேவையை தொடங்குவதற்கு உதான்-5 திட்டத்தின் கீழ் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இதையடுத்து இன்று(அக்டேபர்16) முதல் சேலத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி இன்று(அக்டோபர்16) அலையன்ஸ் விமான சேவை நிறுவனம் மூலமாக பெங்களூரு-சேலம்-கொச்சி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. மறுமார்க்கத்தில் இந்த விமானம் கொச்சி-சேலம்-பெங்களூரு வழியாக விமானம் இயக்கப்படவுள்ளது.

இதையடுத்து பெங்களூருவில் இருந்து சேலம் விமான நிலையம் வந்த அலையன்ஸ் விமான நிறுவனத்தில் விமானத்திற்கு அமைச்சர் கே.என் சக்கரபாணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் ஆகியோர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து சேலத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்ட அலையன்ஸ் நிறுவனத்தின் விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து அக்டோபர் மாதம் இறுதியில் பெங்களூரு-சேலம்-ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத்-சேலம்-பெங்களூரு வழியாக இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவையை சேலத்தில் தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் அறிவித்தார். இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேலத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது சேலம் பொதுமக்களிடையே மற்றும் வணிர்களுக்கு இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.