விஷமாக மாறும் அகத்திக்கீரை! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது!

0
141

விஷமாக மாறும் அகத்திக்கீரை! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது!

நமது முன்னோர்கள் உணவே மருந்து எனக் கூறியிருப்பது அனைவரும் அறிந்ததே. அதில் நாம் தினந்தோறும் கட்டாயம் உண்ண வேண்டிய மருந்து தான் கீரை. இந்த கீரைகளில் அதிக அளவு புரத சத்துக்கள் உள்ளது. கீரைகளில் பல வகைகள் இருந்தாலும் ஒவ்வொரு கீரையும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக்கொள்ள கீரை காய்கறி பழங்களை பெரும் உதவி புரியும்.

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவமும் குணம் காணப்பட்டாலும் அதனை நாம் அளவோடு தான் எடுத்துக் கொள்ள. சில கீரைகள் மற்றும் உணவுகளுடன் கலந்து சாப்பிடக்கூடாது என்ற வரைமுறையும் உள்ளது. குறிப்பாக அகத்திக் கீரையில் 63 வகையான சத்துக்கள் உள்ளது என்ன சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். மலச்சிக்கல், பித்தம், செரிமான கோளாறு ஆகிய அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக அகத்திக்கீரை உள்ளது. அகத்திக்கீரை பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது.

யாரேனும் உடல் உபாதைகளால் தினசரி மருந்து உட்கொண்டு வந்தால் அந்த மருந்து வேலை செய்யாமல் போவதற்கு முக்கிய பங்கு அகத்திக்கீரை வகிக்கும். அதனால் அவர்களுக்கு அந்த உபாதை குணமாகாது. அதேபோல கோழி கறி உண்ணும் அவர்கள் அகத்திக் கீரையை சாப்பிடக்கூடாது.

கோழி கறி சாப்பிட்டுவிட்டு அகத்திக்கீரையில் செய்த குழம்பு பொரியலை சாப்பிட்டால் அக்கறை பாய்சனாக மாற அதிக அளவு வாய்ப்புள்ளது. மது அருந்திவிட்டு அகத்திக்கீரை சாப்பிடக்கூடாது. இக்கீரையை மாதத்திற்கு மூன்று முறை சாப்பிட்டாலே போதுமானது.