பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்!

0
90
Alternative heart of pig fitted for man! Life lasting only two months!
Alternative heart of pig fitted for man! Life lasting only two months!

மனிதனுக்கு பொருத்திய பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்!

உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்கிறது.அங்குள்ள டெக்னாலஜிகளின் வளர்ச்சிக்கு அளவே இல்லை.மற்ற நாடுகளும் அதற்கு இணையாகவே போட்டியிட்டு வருகின்றனர்.அவ்வாறு அமெரிக்காவில் மனிதனுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாற்று இதயத்தை செலுத்தும் முயற்சியில் இறங்கினர்.மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் அந்த அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்தும் முடித்தனர்.அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு பல நாட்களாக இருதய பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இவர் மருத்துவரை சந்தித்து பல ஆலோசனைகளை மேற்கொண்டார்.பின்பு மாற்று அறுவைசிகிச்சைக்கான சோதனையை செய்து கொண்டார்.அவ்வாறு செய்த போது சில காரணங்களால் இவருக்கு இருதய மாற்று சிகிச்சை செய்ய முடியாது என கூறினர்.அதனையடுத்து இவருக்கு மரபணு மாற்றம் செய்த பன்றியின் இருதயத்தை பொருத்தலாம் என மருத்துவர்கள் ஆலோசனை செய்து கூறினர்.அவ்வாறு மாற்றுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி வழங்க வேண்டும்.அத்துறை ஒப்புக்கொண்ட பிறகு ,இவர்கள் சிகிச்சைக்கான பணியை தொடங்க ஆரம்பித்தனர்.கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தை பென்னட்க்கு பொருத்தினர்.

அதில் பன்றியின் இதயத்தில் உள்ள உயிரணக்களின் சர்க்கரை அளவை அகற்றி மாற்றம் செய்யப்பட்ட பிறகே பென்னடுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.அவர் சுயமாக சுவாசிப்பதாகவும் கூறினர்.இவ்வாறு இருக்கையில் பென்னட் மருத்துவர்களின் கண்காணிப்பிலே இருந்து வந்தார்.இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் உடல்நலக் குறைவால் தற்போது உயிரிழந்து விட்டார்.பன்றியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இதயம் இரண்டு மாதங்கள் மட்டுமே அவரை உயிர் பிழைக்க வைத்தது.