அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!!  விளாசி தள்ளிய முதல்வர்!!  

0
40
amit-shah-started-padayatra-not-bhava-yatra-the-game-is-only-for-a-while-the-chief-minister-who-pushed-vlasi
amit-shah-started-padayatra-not-bhava-yatra-the-game-is-only-for-a-while-the-chief-minister-who-pushed-vlasi

அமித் ஷா தொடங்கியது பாதயாத்திரை அல்ல பாவ யாத்திரை!! ஆட்டம் எல்லாம் சில காலம் தான்!!  விளாசி தள்ளிய முதல்வர்!!  

மத்திய அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில காலம் தான். எனவே இந்தியாவை காப்பாற்ற I-N-D-I-A வுக்கு வாக்களிக்குமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவன் பேசியதாவது,

கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வாழ்வை அளித்த திராவிட மாடல் ஆட்சியை மக்கள் எல்லோரிடமும் பரப்புங்கள். நேற்று தமிழகத்திற்கு வருகை புரிந்த அமித்ஷா என்ன நலத்திட்டங்களை துவக்கி வைக்கவா வந்தார்?? ஏதோ ஒன்றுக்கும் உதவாத பாதயாத்திரை துவக்கி வைப்பதற்காக வேலை இல்லாமல் வந்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தற்போது என்ன பாதயாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் நடத்துவது பாதயாத்திரை அல்ல. குஜராத்தில் 2002-ம் ஆண்டில் நடந்த சம்பவத்திற்கும், தற்போது மணிப்பூரில் நடந்து கொண்டு இருப்பதற்கும் மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை. 2014-ல் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தவர்கள், இலங்கை பிரச்னை குறித்து பேச ஏதேனும் அருகதையோ, உரிமையோ உள்ளதா?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை குறித்து அமித்ஷா பேசியுள்ளார். ஆனால் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மத்திய அமைச்சர்களாகவே உள்ளனர். இது குறித்து என்றாவது பிரதமரிடம் அமித்ஷா கேள்வி எழுப்பி இருப்பாரா?? பாஜக அரசு அமலாக்க துறையை தங்களது எதிரிகளை சலவை செய்யும் வாஷிங்மெஷினாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாஜக ஆட்சியில் அளவில்லாத ஆட்டம் முடிய போகிறது. இனி எல்லாம் சில மாதங்கள் தான். இனிமேல் இந்தியாவிற்கு விடிவு காலம் தான். எனவே இந்தியாவை காப்பாற்ற I-N-D-I-A வுக்கு வாக்குகளை அளியுங்கள் என்று கூறினார்.