நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!!

0
39
two-buses-collided-head-on-it-is-a-pity-that-6-people-died-on-the-spot
two-buses-collided-head-on-it-is-a-pity-that-6-people-died-on-the-spot

நேருக்கு நேராக மோதிய இரண்டு பஸ்கள்!! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான பரிதாபம்!! 

இரண்டு பஸ்கள் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி என்ற பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஒரு ஆம்னி பஸ்ஸில் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களது பஸ் மல்காப்பூர் என்ற பகுதியில் நந்தூர் நாகா என்ற மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது எதிரே மராட்டிய மாநிலம் நாசிக் நோக்கி தனியாருக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் நாசிக் சென்று கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றுள்ளது. அப்பொழுது பாதயாத்திரை சென்ற பேருந்தும், நாசிக் நோக்கி சென்ற பேருந்தும் நேருக்கு நேராக பயங்கரமாக மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 19 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்தவர்கள் புல் தானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் லேசான காயம் அடைந்த 32 பயணிகள் அருகில் உள்ள குருத்வாராவில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மராட்டிய மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு புல்தானா மருத்துவமனையில் அரசு செலவில் சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.