40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

0
153

40  வயதில் ஆண்டர்சன் படைத்த சாதனை… இதெல்லாம் இனிமேல் பவுலர்களுக்கு பகல் கனவுதான்!

இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிகச்சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் சதமடித்து கலக்க, ஆண்டர்சன் 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் 950 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அவருக்கு அடுத்த இடத்தில் மெக்ராத் 949 விக்கெட்களுடனும், வாசிம் அக்ரம் 919 விக்கெட்களுடனும் உள்ளனர். சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகள் குறைந்து வருவதால் வேகப்பந்து வீச்சாளர்கள் டி 20 போட்டிகளிலேயே அதிக ஆர்வம் காட்டுவதாலும் இனிவரும் பவுலர்களுக்கு இந்த சாதனை எல்லாம் பகல் கனவாகவே இருக்கும்.

இதே டெஸ்ட் போட்டியில்தான் ஆண்டர்சன் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் யாருமே படைக்காத சாதனையைப் படைத்தார். டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை ஆண்டர்சன் பெற்றார். மான்செஸ்டரில் தற்போது நடந்துமுடிந்த இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்டில் இந்த சாதனையை படைத்தார்.

தற்போது 40 வயதாகும் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். மேலும் அவர் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்றும் 50 வயதுவரை விளையாட ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.