ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறைந்தால்…. கூட்டுறவுத்துறை பதிவாளர் அதிகாரிகளுக்கு விடுத்த கடும் எச்சரிக்கை!

0
73

கூட்டுறவுத் துறை சார்பாக நடத்தப்படும் நியாய விலை கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை சமையல் எண்ணெய் போன்ற பொருட்கள் விற்கப்படுகின்றன அவை தரமற்ற நிலையில் இருப்பதுடன் பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவை இருப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளனர். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தது.

இந்த நிலையில், அந்த பத்திரிகைகளில் தொடர்ந்து வந்த செய்தியை மேற்கோள்காட்டி, அனைத்து மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் மேலாண் இயக்குனர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்வதையும் அவன் தயாரிப்பு தேடி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்டவை பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

கட்டுப்பாடற்ற பொருட்களின் விலை வெளிச்சந்தை நிலையை விட குறைவாக இருக்க வேண்டும். மக்கள் வாங்கும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் முறையாக பில் வழங்க வேண்டும். மேற்காணும் அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி தவறினால் சரியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.