விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

0
39

விஷவண்டு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.2 லட்ச நிதியுதவி அறிவிப்பு!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷ வண்டுகள் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் கடந்த வியாழன் கிழமை அன்று திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி பயங்கரமாக காயமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வீரமணியை மீட்டு திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு; மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில் விஷ வண்டு தாக்கி உயிரிழந்த வீரமணிக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. வீரமணி உயிரிழந்த செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வீரமணி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் வீரமணி குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை சீர்காழி அதனை சுற்று வட்டார பகுதிகளில் விஷ வண்டுகள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளதால் இதனை சுகாதாரத்துறை கவனத்தில் கொண்டு முழுமையாக அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்று விஷ வண்டு தாக்கியதால் பலர் காயமடைந்தனர் என்றும் சிலர் உயிரிழந்த உள்ளனர் என்றும் பல ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால் இதுகுறித்து இன்னமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

author avatar
Parthipan K