சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு!!

0
90

 

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு…

 

இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

 

அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். மேலும் அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 70 ஒருநாள் போட்டிகளிலும் 75 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

 

கடந்த 2022ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 47 பந்துகளில் 86 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இவர் விளையாடிய சிறப்பான ஆட்டம் இதுவாகும்.

 

மொத்தம் 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் 6 சதங்கள் அடித்து 14 அரை சதங்கள் அடித்து 2419 ரன்கள் எடுத்துள்ளார். 75 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் ஒரு சதம் அடித்துள்ளார். மேலும் 12 அரைசதங்கள் அடித்து 2074 ரன்கள் எடுத்துள்ளார். 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 5 அரை சதங்கள் அடித்து 573 ரன்கள் எடுத்துள்ளார்.

 

இதையடுத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அலக்ஸ் ஹேல்ஸ் அவர்கள் “டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் மொத்தம் 156 போட்டிகளில் நாட்டுக்காக விளையாடியதை நினைத்து பெருமை அடைகிறேன். என்னுடைய இந்த கிரிக்கெட் பயணத்தில் எனக்கு நிறைய நினைவுகள் உள்ளது. மேலும் நிறைய நண்பர்கள் உள்ளனர். இந்த நினைவுகள் என் வாழ்நாளின் கடைசி நாள் வரை நிலைத்திருக்கும். நண்பர்களும் என் வாழ்நாளின் கடைசி வரை இருப்பார்கள். நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் இதுதான் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.