சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

0
156
Another 'Vande Bharat' flying from Chennai to Mysore!! Happy passengers!!

சென்னையில் இருந்து மைசூருக்கு பறக்கும் மற்றுமொரு ‘வந்தே பாரத்’!! மகிழ்ச்சியில் பயணிகள்!!

இந்தியாவின் அதிவேக ரயில் சேவை என்றால் அது ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தான். சென்னை ICF தொழிற்சாலையில் தயார் செய்யப்படும் இந்த ரயில்களின் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தினால் நாடு முழுவதும் இந்த ரயில்களுக்கான வழித்தடங்களை உருவாக்கி விரிவுப்படுத்தும் பணியில் மத்திய அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது.

இதன்படி தற்போது நாடு முழுவதும் 47 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.தெற்கு ரயில்வே சார்பில் இதுவரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, விஜயவாடா, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம், காசர்கோடு, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை-மைசூரு : புதிய ரயில் சேவை முன்னதாக சென்னை-மைசூரு இடையே கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ ரயில் சேவையினை துவக்கி வைத்தார்.இந்நிலையில், இன்று(மார்ச்.12) மற்றுமொரு சென்னை-மைசூரு இடையேயான ‘வந்தே பாரத்’ ரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.

வணிகர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பெங்களூர், காட்பாடி வழியே செல்லும் இந்த ரயில்களால் அதிகம் பயனடையும் காரணத்தினால் மற்றுமொரு ‘வந்தே பாரத்’ இந்த வழித்தடத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

முதற்கட்டமாக சென்னை-பெங்களூர் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட இந்த ரயில் சேவை முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், ஏப்ரல் 4ம் தேதிக்கு பிறகு மைசூரு வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.