கோடிகளில் பணம் புரள வைக்கும் – லஷ்மி பூஜை

0
221

எந்த ஒரு விஷயமும் தொடங்கும் முன், உங்களுக்கு முழு நம்பிக்கை , அவசியம். காலை பிரம்ம முஹூர்த்த வேளை யில் கண் விழித்து , உடலை சுத்தமாக்கி – நீங்கள் செய்யும் எந்த செயலும் , உங்களுக்கு முழு பலன் அளிக்கும்.
இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் கனகதாரா ஸ்தோத்ரம் துதிப்பது – உங்களுக்கு மன வலிமை அளித்து , கடன் அடைப்பது ஒன்றே உங்கள் முழு முதல் குறிக்கோள் என்ற எண்ணம் ஏற்படுத்தி , அதற்குரிய வழிகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. மிக மிக அபூர்வ , அதிர்வு ஏற்படுத்தும்
அற்புத வழிமுறை இது.
சரியாக – 48 நாட்கள் இடை விடாமல் – இந்த கனக தாரா ஸ்தோத்ரம் பாராயணம் செய்தால் – நீங்கள் உங்கள் கடன் அடைந்து , நிம்மதிப் பெருமூச்சு விடுவது உறுதி. அப்படி ஒரு மண்டலம் நீங்கள் செய்யும்போது , இடையில் வரும் வெள்ளிக் கிழமைகளில் , நீங்கள் மகா லட்சுமி பூஜையும் செய்வது உங்களுக்கு மேலும் நன்மை பயக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜையை செய்து பலன் அடையலாம்.

இதற்கு வேண்டிய பொருட்கள்:

குத்து விளக்கு , உதிர்த்த மல்லிகை மற்றும் சாமந்தி பூக்கள் – ஒரு சிறு பாத்திரத்தில் , பால் – ஒரு கிண்ணம் பழங்கள் – வாழை, எந்த பழம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். தண்ணீர் – ஒரு கிண்ணம் , குங்குமம் , சந்தனம் அல்லது மஞ்சள் ,
பெரிய தாம்பாளம், லக்ஷ்மி உருவம் பதித்த வெள்ளி தகடு அல்லது சிறிய மகா லக்ஷ்மி விக்ரகங்கள்

சர்க்கரை பொங்கல் , முளை கட்டிய கருப்பு கொண்டை கடலை. பூஜை அன்று பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து கோலம் இடுங்கள்.

குத்து விளக்குடன் லக்ஷ்மி தகடை சிறிய நூலால் கட்டிவிடுங்கள். மாட்டுவதற்கு விளிம்பு இருந்தால் குத்து விளக்கில் மாட்டிவிடலாம். குத்து விளக்கை தாம்பாளத்தில் வைத்து மஞ்சள் குங்குமம் இடுங்கள். இப்போது நெய்வேத்யம் செய்ய பால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளை தயாராகி வைத்துவிடுங்கள். ஐந்து முக விளக்கை ஏற்றுங்கள். நெய்யினால் கூட விளக்கு ஏற்றலாம். பூஜையை மலர்களை வைத்து ஆரம்பிக்கலாம்.

லக்ஷ்மி அஷ்டோத்திர மந்திரத்தை முழுவதுமாக மலர்களை கடவுளுக்கு அர்ச்சனை செய்துகொண்டே மனம் ஒன்றி படியுங்கள். படித்து முடித்தவுடன், சகல ஐஸ்வர்யமும் கிட்ட கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். தீர்த்தம் கொண்டு சர்க்கரை பொங்கல், பழங்கள், பால் மற்றும் கொண்டை கடலைகளை கடவுளுக்கு நெய்வேத்யம் செய்யுங்கள். பின் ஒரு புது துணியில் முளை விட்ட கடலைகளை கட்டி வெற்றிலை பாக்குடன் வைத்து, நெய்வேத்யம் செய்த சர்க்கரை பொங்கல் சேர்த்து சுமங்கலிகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு செய்து வர, மகா லக்ஷ்மி நம் வீடு தேடி வருவாள். முளை கட்டிய கடலைகள், சகல சௌபாக்ய வாழ்க்கையின் நம்பிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது.
பணத்தை மதித்து – நடந்தாலே அவர்களுக்கு – மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிட்டும்.

Previous articleசௌபாக்கியங்களும் தரும் புரட்டாசி சனிக்கிழமை!
Next articleவிவசாய மின் இணைப்பு பெற இந்த முறையில் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here