தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

0
120

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்! அமைச்சர் பொன்முடி வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனம் செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீடு அடிப்படையில் முதற்கட்டமாக 76 மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆட்சியில் கௌரவ விரிவுரையாளர் பணி நியமனத்தில் நிறைய  முறைகேடுகள் நடைபெற்றன. 1895 காலி பணியிடங்களுக்கு 9915 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.     பிஎச்டி பட்டம் பெற்று ஜே ஆர் எஸ் நெட் தேர்வு தேர்ச்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு கல்லூரி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு கலைக்கல்லூரி அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1895  கௌரவ விரிவுரையாளர் தற்காலிக பணி நியமனமும் சேர்த்து நடைபெறும்.

அரசு கலைக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்படும் கௌரவ விரிவுரையாளர்கள் அறிவிக்கப்பட்ட கல்வி ஆண்டில் மட்டும்(11 மாதங்களுக்கு) பணி பணி நியமனம் செய்யப்படுவார்கள் அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ 20,000 வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் பல்கலைக்கழக மானிய ஒழுங்குமுறை நடவடிக்கைகள் 2018ன் படி உரிய கல்வித் தகுதி உடையவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். 55 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம்,  NET/SLET/SET தேர்வுகளில் தேர்ச்சி அல்லது பி எச் டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கௌரவ விரிவுரையாளர்கள் தேவைப்படும் பாடப்பிரிவுகள் மாவட்ட வாரியாக பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதில் ஆங்கில பாடத்திற்கு அதிகபட்சமாக 358  பணியிடங்கள் உள்ளன.அடுத்து தமிழ் பாடத்திற்கு 317, வணிகவியல் 150, இயற்பியல் 122, கணினி அறிவியல் 120, கணிதம் 117, மற்றும் வேதியியல் 103  பணியிடங்கள் காலியாக உள்ளன.