ஒப்பந்த செவிலியர்கள் இதனை செய்தால் பணி நிரந்தரதிற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

0
97
If contract nurses do this, there is a chance of permanent employment! Information released by Minister Ma Subramanian!
If contract nurses do this, there is a chance of permanent employment! Information released by Minister Ma Subramanian!

ஒப்பந்த செவிலியர்கள் இதனை  செய்தால் பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு உள்ளது! அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வந்தாலும் தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது அதனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை குறித்த நேரத்தில் அளிக்க வேண்டும் என்பதற்காக ஒப்பந்த முறையில் செவிலியர்கள் பணி அமர்த்த பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. மேலும் ஒப்பந்த செவிலியர்களின் ஒப்பந்தமானது கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் 31 ஆம் தேதி முடிவடைந்தது.ஆனால் அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என செவிலியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

அதன் பிறகு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் செவிலியர்கள் பணி நீக்கம் இல்லை. இருப்பினும் அவர்களின் பணி நிரந்தரத்திற்கும் வாய்ப்பில்லை என தெரிவித்தார்.அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசானது அதற்கான முடிவுகளை எடுக்கும் என கூறினார்.

அதனை தொடர்ந்து நேற்று அவர் கூறுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா பரவல் காரணமாக தான் 2300 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டனர். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் கொரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் எந்த ஆவணக்களையும் சரிபார்காமல்  செவிலியர்களை பணி அமர்த்தினார்.

நடப்பாண்டில் இருக்கும் காலி பணியிடங்களில் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பு குறைவு என தெரிவித்தார். ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்றால் அவர்களின் ஆவணங்களை சரி பார்த்தால் வாய்ப்புள்ளது என கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K