கும்பம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

0
81
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். களத்திர ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் எடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். குடும்ப உறவு பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் முன்னேற்றங்கள் கூடிவரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் சில பொழுதுபோக்கு அம்சங்களை மேற்கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் இருக்கும் நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இதனால் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani