கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

0
71
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகம் அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே அதி அற்புதமான அன்யூனியம் நிலவும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சிலருக்கு பொன் பொருள் ஆடை வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகளை கிடைக்க பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் உண்டாகும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைத்து மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பலிதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani