இனி 500 ரூபாய் நோட்டுகள் தடையா ?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

0
46
Are 500 rupee notes banned anymore?? Shocking information given by the Ministry of Finance!!
Are 500 rupee notes banned anymore?? Shocking information given by the Ministry of Finance!!

இனி 500 ரூபாய் நோட்டுகள் தடையா ?? நிதி அமைச்சகம் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

இந்திய ரிசர்வ் வங்கி ,கடந்த 2016 ம் ஆண்டு முதலில் ரூ 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்பு இதனை திரும்ப பெறுவதாக ஜூன் 19 ம் தேதி அறிவித்திருந்தது.

திரும்ப பெரும் ரூ.2000 நோட்டுகளை எந்த வங்கி கிளைகளில் வேண்டுமானாலும் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி   காலக்கெடு ஒருபொழுதும் நீடிக்கப்பட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

இவை அனைத்தும் கருப்பு பணத்தை தடுக்கும் விதமாக அரசு கொண்டு வந்த திட்டமாகும். 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதால் தற்பொழுது அதிக அளவில் 500 ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் உள்ளது என்பதால் இதனை தடை செவதற்கான வாயிப்பு உள்ளதா என்று நிதியமைச்ச்சகதிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிதி அமைச்சகம் அது குறித்து எதுவும் பரிசீலனை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு கொண்டு வர முடியுமா என்று கேள்வி எழுப்பிய உறுப்பினர்களுக்கு அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனை செய்யப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

author avatar
Parthipan K