பத்தாம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்… உங்களுக்காக மத்திய அரசில் வேலை இருக்கிறது… இந்த வேலைக்கு மாதம் 63000 சம்பளம்!!

0
30

 

பத்தாம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்… உங்களுக்காக மத்திய அரசில் வேலை இருக்கிறது… இந்த வேலைக்கு மாதம் 63000 சம்பளம்…

 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மாதச் சம்பளமாக 63000 ரூபாய் வரை வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

அதாவது மத்திய அரசின் கீழ் இயங்கும் நெய்லிட்(NIELIT) என்று அழைக்கப்படும் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாகவுள்ள ஓட்டுநர் பணிகளுக்கு தற்பொழுது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

 

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் பொழுதே எந்த பகுதியில் வேலை வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதாவது கிழக்கு பகுதியித் வேலை வேண்டுமா, மேற்கு பகுதியில் வேலை வேண்டுமா, வடக்கு பகுதியில் வேலை வேண்டுமா, அல்லது தெற்கு பகுதியில் வேலை வேண்டுமா என்று தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

 

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழிநுட்பவியல் நிறுவனத்தில் ஸ்டாப் கார் டிரூவர் என்ற வேலைக்காக தற்பொழுது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணபிக்க வேண்டும் என்பவர்கள் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

குறிப்பு: டிரைவிங் பணிக்காக விண்ணப்பம் வெளியாகியுள்ளதால் டிரைவிங் பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கட்டாயமாக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

வேலை பற்றிய விவரங்கள்…

 

பணியின் பெயர் – ஸ்டாப் கார் டிரைவர்

 

கல்வித் தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி

 

முன் அனுபவம் – டிரைவிங் தொழிலில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் வேண்டும்

 

வயது வரம்பு – குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 25 வயது

 

சம்பளம் – தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 19900 ரூபாய், அதிகபட்சம் 63200 ரூபாய்

 

காலியாக இருக்கும் இடங்கள் – 9

 

விண்ணபிக்க கடைசி தேதி – ஆகஸ்ட் 22

 

தேர்வு செய்யப்படும் முறை – எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு

 

விண்ணப்பக் கட்டணம் – 300 ரூபாய் (எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலமாக https://recruit-delhi.nielit.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று வரும் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

NIELIT நிறுவனத்தில் ஸ்டாப் கார் டிரைவர் பணிக்கு விண்ணபிக்கும் நபர்கள் ஆன்லைனில் 300 ரூபாய் பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும். பின்னர் இவர்களுக்கு ஓ.எம்.ஆர் ஷீட் முறையிலான தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து திறனறி தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன் பின்னர் திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வேலை வழங்கப்படும்.

 

எழுத்துத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு https://recruit-delhi.nielit.gov.in என்ற இணையதளத்தில் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளது. அதை பயன்படுத்திக் கெள்ளலாம்.