தலையில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டு நீங்கி முடி நன்றாக அடர்த்தியாக வளர இயற்கை ஹேர்பேக்!

0
825

தலையில் உள்ள பூச்சி வெட்டு புழுவெட்டு நீங்கி முடி நன்றாக அடர்த்தியாக வளர இயற்கை ஹேர்பேக்!

இன்றைய சூழ்நிலையில் அதிகமானோருக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று முடி கொட்டுதல். இன்றைய இளம் வயதினர் இடையே முடி கொட்டுதல், அடர்த்தி இல்லாமை,வழுக்கை விழுதல், இதெல்லாம் சாதாரண விஷயங்களாக இன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இத்தகைய தலை முடி பிரச்சனைகளுக்கு உதவும் இயற்கையான ஹேர் பேக் பற்றி பார்ப்போம்.

தலைமுடி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன ஊட்டச்சத்துக் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, ஹார்மோன் பிரச்சனை, மன உளைச்சல், பரம்பரையாக முடி கொட்டுதல், போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

முதலில் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பொருள் கேரட். இந்த கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் சி, போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. இது நமது தலையில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை தொற்று, புழுவெட்டு, போன்றவற்றை நீக்க உதவும். முடியின் வேர்க்கால்களில் தூண்டி முடி அடர்த்தியாக வளர உதவும். முடியில் ஏற்படும் நுனிப் பிளவை சரி செய்யும்.

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 10 சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ளவும். இதில் கால்சியம், விட்டமின் பி6, விட்டமின் சி, சல்பர், ஆகியன உள்ளன. முடி பிளவு சரியாக நமது உடலில் சீரான ரத்த ஓட்டம் தேவை. வெங்காயத்தில் உள்ள சல்பர் முடியின் வேர்க்கால்களில் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. முடியோட வேர்க்கால்களுக்கு உறுதியை கொடுத்து சீராக வளர உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் பொடுகு, பேன் பிரச்சனை போன்றவைகளை வராமல் தடுக்கிறது.

சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளவும். பூச்சி விட்டு உள்ளவர்கள் வெங்காயத்தின் சாறை மட்டுமே மூன்று மாதங்கள் பூச்சி வெட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் முடி வளரும். மூன்றாவதாக எடுத்துக் கொள்ளப்படும் பொருள் கற்றாழை. கற்றாழையில் உள்ள பரொட்டியோலாட்டிக் என்ற என்சைம் நமது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டத்தை அளிக்கும். கற்றாழை மடலில் உள்ள ஜெல் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். கற்றாழை மடல் இல்லையெனில் கடையில் உள்ள ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட் உரித்த வெங்காயம் மற்றும் கற்றாழை ஜெல் 3 ஸ்பூன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். இதை ஒரு பவுலில் மாற்றி தலைமுடியில் எடுத்து நன்றாக மசாஜ் கொடுத்து தடவி ஒரு 20 நிமிடம் ஊற விடவும். பிறகு தலைக்கு சீயக்காய் கொண்டு அலசவும். இதன் மூலம் உடல் சூடும் குறைந்து முடி நன்றாக வளரும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை, சளி பிரச்சனை, உள்ளவர்கள் இந்த பேக்கை தடவி பத்து நிமிடங்களில் தலையை அலசவும். அடுத்தடுத்து உபயோகப்படுத்தும் போது நேரத்தை அதிகரிக்கவும். இதன் மூலம் இந்த இயற்கை பேக்கை உடல் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கும். இது பக்க விளைவுகள் இல்லாத பூச்சி வெட்டு, புழுவெட்டு என அனைத்தையும் சரி செய்யும் இயற்கையான வீட்டு வைத்திய முறையாகும்.