புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0
103
#image_title

புதிய ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் திட்டமான பொது விநியோக திட்டத்தின் மூலம் வறுமையில் வாடி வரும் ஏழை,எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் மிகவும் மலிவான விலையில் இருப்பதால் மக்களிடையே எப்பொழுதும் இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

ஸ்மார்ட் கார்டில் PHH,NPHH,PHH – AAY,NPHH – S,NPHH -NC என்று 5 வகை குறியீடுகள் இருக்கிறது.இதில் PHH,NPHH,PHH – AAY குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு அரசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படும் நிலையில் 1 கிலோ சர்க்கரை 13 ரூபாய்க்கும்,1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்,1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.NPHH – S குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு சர்க்கரை மட்டும் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டில் முகவரி மாற்றம்,பெயர் மாற்றம்,ரேஷன் கார்டு அட்டை தொலைத்தவர்கள் புதிதாக ரேஷன் அட்டை நகல் பெறுவதற்காக ரூ.25 கட்டி விண்ணப்பித்தது வருகின்றனர்.இவர்களுக்கு சில நாட்களில் ரேஷன் கார்டு நகல் கிடைத்து வரும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோருக்கு இன்று வரை ரேஷன் கார்டு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டும் இன்றி திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு NPHH குறியீடு கொண்ட அட்டை மட்டுமே வழங்கப்படுகிறது.இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு முறையான சலுகைகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு இருக்கிறது.ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களின் முழு தகவல் தெரியாமல் ரேஷன் அட்டை வழங்கப்படுவதால் ஏழை மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதுமட்டும் இன்றி புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்று சொல்லப்படுகிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் என்று வாக்குறுதி அளித்தது.அதன்படி ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த பின்னர் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய பெண்களிடம் ரேஷன் கார்டு இருக்க வேண்டும்.இதனால் பலர் புதிதாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தனர்.

திமுக அரசு ஏற்கனவே ஒரு கணக்கு போட்டு வைத்திருந்ததால் புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கு ரூ.1000 வழங்குவதில் பல்வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்று எண்ணி புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்கனவே ரேஷன் கார்டு இருந்தும் ஒரு சில மாற்றங்களுக்கான விண்ணப்பித்த நபர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது.புதிதாக ரேஷன் கார்டு வாங்கும் பெண்களுக்கு ரூ.1000 தர வேண்டுமே என்று நினைக்காமல் நிலுவையில் உள்ள ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.