இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

0
145

பூமி, சந்திரன் ,சூரியன் உள்ளிட்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.

இன்று மாலை 4 மணி அளவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் கஜகஸ்தான் ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம் உலகளவில் சூரிய கிரகணம் 2.19 மணி அளவில் தொடங்கி 3.32 மணியளவில் முடிவடையும். ரஷ்ய நாட்டின் மத்திய பகுதிகளில் சூரியனை 80 சதவீதம் சந்திரன் மறைக்கும்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் நாளை 5:30 மணி அளவில் முழு சூரிய கிரகணத்தை காண முடியும் அதிக நேரம் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தென்படும் என சொல்லப்படுகிறது. அதாவது 1 மணி நேரம் 45 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் தென்படும் அதிகபட்சமாக குஜராத்தின் துவாரகாவிலும், மேற்கு வங்க தலைநகர் கல்கத்தாவிலும் குறைந்தபட்சமாக 12 நிமிடங்களும் இந்த சூரிய கிரகணம் தென்படும் என்று சொல்லப்படுகிறது.

அதோடு மும்பை,புனே, தானே, டெல்லி, அகமதாபாத், சூரத், ஜெய்பூர், இந்தூர், போபால், லூதியானா, ஆக்ரா, சண்டிகர், உஜ்ஜெயின், மதுரா, போர் பந்தர், காந்திநகர், சில்வாசா, பானாஜி உள்ளிட்ட நகரங்களில் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக சூரிய கிரகணம் தென்படும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்க கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களை வைத்துக்கொண்டு பார்க்கக் கூடாது. சூரிய வெளிச்சத்தை குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும் சூரியனின் பின்பத்தை ஒரு வெண் திரையில் விழச் செய்தும் பார்க்கலாம்.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூர், கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி போன்ற நகரங்களில் 1 மணி நேரத்திற்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று சொல்லப்படுகிறது.

ஆய்ஜோல், திப்ருகர், இம்பால், இடாநகர், கோஹிமா, சில்சார், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இது தென்படாது. தமிழகத்தில் இதுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. மீண்டும் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி 2027 ஆம் ஆண்டு இதே போன்ற சூரிய கிரகணம் நிகழும் என்று சொல்லப்படுகிறது.