ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!! 

0
30
#image_title

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! கிரிக்கெட்டில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!!!

2013ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிகெட் அணி காலிறுதிக்கு போட்டியில் நேபாளை வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கின்றது.

ஆசிய விளையாட்டு போட்டிகளின் கிரிக்கெட்டில் இன்று(அக்டோபர்3) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா 2 ரன்களிலும், ஜிதேஸ் ஷர்மா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து விளையாடிய மற்றொரு தொடங்கிய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். 49 பந்துகளில் 7 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் அடித்து 100 ரன்கள் சேர்த்து ஆட்மிழந்தார். இறுதியாக களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக விளையாடினார்.

15 பந்துகளை சந்தித்த ரிங்கு சிங் 4 சிக்சர்கள் இரண்டு பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் சேர்த்தார். காலம் தூபே 25 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்களில் முடிவில் இந்தியா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள் அணியால் 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் காலிறுதிப் போட்டியில் இந்தியா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நேபாள் அணியில் திபேந்திர சிங் ஏய்ரி 32 ரன்களும் சுந்தீப் ஜோரா 29 ரன்களும், குஷால் மல்லா 29 ரன்களும், குஷால் பர்டெல் 28 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய ரவி பிஷ்னோயி மற்றும் அவேஷ்கான் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அர்ஷ்தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளையும், ரவிஸ்ரீனாவாசன் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.