தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

0
16
#image_title

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது படமான தலைவர்170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கிறார். அனிருத் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தலைவர்170 திரைப்படத்தின் கெஸ்ட் அன்ட் கிரூவ் அதாவது இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் வேலை செய்யும் மற்ற நபர்களை அறிவித்து வருகின்றது. அதன்படி நேற்று(அக்டோபர்2) தலைவர்170 திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

அதன்படி சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன், அசுரன் திரைப்படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், இறுதிச் சுற்று திரைப்படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங் ஆகியோர் தலைவர். 170 திரைப்படத்தில் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் தற்பொழுது தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகர் ராணா டகுபதி அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் ராணா டகுபதி அவர்கள் பாகுபாடு திரைப்படத்தில் பல்வாழ்தேவன் என்ற கதாபாத்திரத்தில் வில்லன் ரோலில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். மேலும் பல திரைப்படங்களில் நடிகர் ராணா டகுபதி அவர்கள் நடித்துள்ளார்.