உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

0
44
#image_title

உலகத்தின் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம்!!! பின்லாந்து நாடு சாதனை!!!

உலகத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையிலான பாஸ்போர்ட் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை பின்லாந்து நாட்டு அரசாங்கம் அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் நாடுகளில் பின்லாந்தும் ஒன்றாக உள்ளது. இங்குதான் தற்பொழுது உலகத்தின் முதல் டிஜிட்டல் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிஜிட்டல் பாஸ்போர்டை பயன்படுத்தும் பொழுது விமானத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை. மேலும் பயணிகளின் நேரமும் வெகுவாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பயணிகளின் பயண நேரத்தை குறைப்பதும், ஆவணங்கள் சரிபார்ப்பு, மனித தொடர்புகளின் தேவைகளை குறைப்பது, மென்மையான மற்றும் பாதுகாப்பான பயணம் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஃபின் ஏர், ஃபின்னிஷ் போலீஸ், ஃபின் ஏவியா விமான நிலைய அதிகாரிகள் ஆகிய மூன்றும் இணைந்து கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டத்தை பின்லாந்து அரசு அறிமுகம் செய்தது.

இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டமானது ஹெல்சின்கி நகரத்தில் இருந்து இங்கிலாந்து திரும்பும் சில பின் ஏர் விமானப் பயணிகளிடம் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றது. டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டத்திற்காக ஃபின் டி.சி.சி பைலட் என்ற செயலையும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த செயலியை பயணிகள் தங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் பயணிகள் தங்களின் முக அங்கீகாரம் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளை சரிபார்த்து பின்னர் பின்லாந்து நாட்டின் எல்லைக்கு உட்பட்ட காவல்துறையினருக்கு தரவுகளை அனுப்ப வேண்டும்.

இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் மூலமாக பயணிகள் தங்களது பாஸ்போர்ட் தரவுகளை மொபைல்களில் சேமித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது அந்த தரவுகளை பயன்படுத்திக் கெள்ளலாம். இதற்காக பாஸ்போர்டை தனியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தேவை இருக்காது.

முதலில் இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் சாதனை முறையில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செயல்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னர் இந்த டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டத்தின் நிலைகள் மற்றும் குறைகளை ஆராய்ந்து நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று பின்லாந்து அரசு தெரிவித்து இருக்கின்றது.

இதே போல தென் கொரியா, இங்கிலாந்து, போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளும் டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலமாக வருங்காலங்களில் டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டமானது தற்பொழுது நடைமுறையில் உள்ள டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்ற திட்டங்கள் போலவே டிஜிட்டல் பாஸ்போர்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகின்றது.

என்னதான் நேரம் குறைவது, எளிமையான பயணம், பாதுகாப்பான பயணம் என்று ஆயிரம் நல்லது இருந்தாலும் ஆபத்து என்பது இதில் உள்ளது. அது என்ன என்றால் ஹேக் செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள் டிஜிட்டல் பாஸ்போர்டை ஹேக் செய்து தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது. இதையடுத்து ஹேக்கர்களின் இது போல செயல்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பின்லாந்து நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.