பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!

0
69

பெற்றோர்கள் கவனத்திற்கு:!பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த +1 மற்றும் +2 பள்ளி பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகளும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையாகவும், வருகை பதிவேட்டின் மதிப்பெண்கள் அடிப்படையாகவும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும்,பத்தாம் வகுப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும்,தேர்வுக்கு செல்லாத மாணவர்களுக்கும் துணை தேர்வு எழுதும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடக்கும் என்றும்,பிளஸ் 1 தேர்வு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரையும்,பிளஸ் 2 தேர்வு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29-ம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகளைப் பற்றியும்,மேலும் தகவல்களை அறியவும் அந்தந்த பள்ளி ஆசிரியர்களிடம் தெளிவான விவரங்கள் கேட்டு கொள்ளுமாறு மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகின்றது.

author avatar
Pavithra