திமுகவில் இணைந்தார் ! அதிமுக வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் !

திமுகவில் இணைந்தார் ! அதிமுக வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் !

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய வி.எஸ்.விஜய் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். வேலூர் மாவட்டத்தை சார்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் அப்போது திடீரென அமைசசர் பதவி பறிக்கப்பட்டது மேலும் வேலூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது இதன் பின் எந்தவொரு பதவியும் வகிக்காமல் இருந்த இவருக்கு ஜெயலலிதா இறப்பிற்கு பின் அதிமுக வின் மருத்துவ அணியின் … Read more

இந்தியா – இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்

இந்தியா - இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் கிரிக்கெட் போட்டிகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை  எனில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகலாம். இங்கிலாந்து அணி … Read more

இங்கிலாந்து – பாகிஸ்தான் 3வது நாளிலும் மழை

இங்கிலாந்து - பாகிஸ்தான் 3வது நாளிலும் மழை

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் பரிதவித்தது. பாபர் அசாம் 25 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் ஏறக்குறைய 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.  223 ரன்கள் எடுத்திருந்த போது … Read more

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

அதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

சமீப நாட்களாக அதிமுக கட்சியில், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்புக்கும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ், ஓபிஎஸ் யாரை நியமிப்பது போன்ற கருத்துக்கள் வியூகங்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இது குறித்து தற்போது அதிமுக தலைமைப் பொறுப்புகள் பற்றி இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். கட்சி நிர்வாகிகளின் ஒப்புதல் இல்லாமல் தலைமைப் பொறுப்பினை அறிவிக்க கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர். இதில், “நாம் அனைவரும் … Read more

சேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

சேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த மே மாதமே நடக்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இதில் விளையாட போகும் சென்னை அணியினர் சேப்பாக்கத்தில் இன்று  பயிற்சி முகாம்  தொடங்க உள்ளது. இந்த பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில்  கேப்டன் டோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இன்னும் சில முக்கிய வீரர்கள் நேற்று மாலை … Read more

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்

இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்

இஸ்ரேலுடன் ராஜிய உறவு ஒப்பந்தம் செய்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், அதனை வரலாற்றின் சிறப்புமிக்க செயல் என்று அந்த நாட்டு அதிபர்கள் கூறி வருகிறார்கள். இந்தநிலையில் ஈரானோ அந்த ஒப்பந்தத்தின் மூலம் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அதற்கு தயாராக இருக்கவேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தை ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுடன் ராஜீய உறவு மேற்கொள்ளும் முதல் வளைகுடா அரபு நாடாகவும், அரபுநாடுகளில் மூன்றாவது நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை சாடிய ஈரான், … Read more

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு விசாரணையின் அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை நங்கநல்லூர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி அப்போது பதவி வகித்துள்ளார். அவர் பதவி வகித்த அந்த காலகட்டத்தில், வணிக வளாகம் கட்டியதற்காக சுமார் 7.64 லட்சம் முறைகேடு செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ஆர் எஸ் பாரதி மற்றும் … Read more

சந்திராயன்-2 கண்டுபிடித்த பள்ளத்தாக்கிற்கு வைத்த பெயர் ? இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம்?

சந்திராயன்-2 கண்டுபிடித்த பள்ளத்தாக்கிற்கு வைத்த பெயர் ? இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம்?

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக அழைக்கப்படும் டாக்டர் .விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி,சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்ட பாதையில் எடுக்கப்பட்டுள்ள படங்களைக் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு சாராபாய் பள்ளம் (sarabhai crater) என பெயரிடப்பட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) மரியாதை செலுத்தியுள்ளது. இதனை வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பணியாளர்கள் நலன், விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பெயர் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் … Read more

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை

தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படையினரை அந்நாட்டில் உள்ள உரூஸ்கான் மாகாணத்தில் திடீர் தாக்குதலை நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் பாதுகாப்பு படையையினை சேர்ந்த ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.  மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட வருடங்களாக தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஒப்பந்தத்தை ஏற்றுகொண்ட பின்னரும் எந்த பலனும் இல்லை. தலீபான் பயங்கரவாதிகளால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வபோது கண்ணிவெடிகளை … Read more