சந்திராயன்-2 கண்டுபிடித்த பள்ளத்தாக்கிற்கு வைத்த பெயர் ? இந்தப் பெயர் வைத்ததற்கான காரணம்?

0
51

இந்திய விண்வெளி ஆய்வின் தந்தையாக அழைக்கப்படும் டாக்டர் .விக்ரம் சாராபாய் அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி,சந்திராயன் 2 நிலவின் சுற்றுவட்ட பாதையில் எடுக்கப்பட்டுள்ள படங்களைக் காணப்படும் பள்ளத்தாக்கிற்கு சாராபாய் பள்ளம் (sarabhai crater) என பெயரிடப்பட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்(ISRO) மரியாதை செலுத்தியுள்ளது.

இதனை வடகிழக்கு மண்டல மேம்பாட்டு இணை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகம், பொதுமக்கள் குறைதீர்ப்பு, பணியாளர்கள் நலன், விண்வெளி துறை இணை அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் பெயர் வைக்கப்பட்டது. அமெரிக்காவின் அப்போலோ 17 விண்கலமும், சோவியத் யூனியனின் லூனா 2 1 விண்கலம் இறங்கிய இடத்திற்கு 280 முதல் 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த எரிமலை பள்ளத்தாக்கிற்கு டாக்டர் விக்ரம் சாராபாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளித் துறையின் உலகின் முன்னணி நாடுகளில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எண்ணிய சாராபாய் தொலைநோக்குடன் கனவு கண்ட கனவை நனவாக்கும் வகையில் இஸ்ரோ புதிய பெயர் வைத்து அமைத்துள்ளது.

கடந்த 66 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு இடையூறுகளை கண்ட டாக்டர். விக்ரம் சாராபாய் மற்றும்அவரது குழுவினரும் தீவிரமாக பணியற்றி,இந்திய விண்வெளி பயணத்தின் புகழ் விலைமதிப்பில்லாத ரத்தினத்தை போல் மாற்றியதற்கு ஒரு பரிசாக இந்தியாவின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ பெயர் படைத்து, இந்தியாவை மேலும் பெருமை அடைய செய்துள்ளது.

இந்திய நாட்டிற்கு முன்பே பல நாடுகள் விண்வெளி பயணத்தை தொடர்ந்த போதும், இன்றைக்கும் இந்திய கண்டறிந்த விண்வெளி ஆய்வு தகவல்களை பயன்படுத்தி வருகிறது என்பது நம் நாட்டை பெருமை மிகுந்த செயலாகும் என அமைச்சர் டாக்டர் ஜதேத்திர சிங் கூறியுள்ளார்.

தற்பொழுது சந்திராயன் விண்கலம் முப்பரிமானத்தில் படமெடுத்த பள்ளத்தாக்கை சாராபாய் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.இதன் ஆழம் 1.7 கிலோ மீட்டர் என்றும் அதன் உட்புற சுவர் பகுதி 25 முதல் 35 டிகிரி வரையும் சாய்ந்து இருக்கிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது.இந்த ஆய்வுக் குறிப்புகள் எரிமலைகள் நிரம்பிய சந்திரனின் நிலவு பகுதி ஆராய்வதற்கு உதவும் என்று இஸ்ரோ தெரிவிக்கின்றது.

தற்பொழுது வரை சந்திராயன்-2 கண்டறிந்த அறிவியல் தகவல்களை உலக அளவில் வரும் அக்டோபர் முதல் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

author avatar
Parthipan K